
சிவபூமி முதியோர் இல்லம் 07-04-2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வில்லம் ஆரம்பிப்பதற்கு பேருதவி புரிந்தவர் அமெரிக்காவில் வாழும் அன்பர் திரு.சி.பாலச்சந்திரன். சகல வசதிகளுடன் ஆதரவற்ற 76 முதியோர்கள் (ஆண் பெண் இருபாலாரும் ) மகிழ்வூடன் வசிக்கின்றார்கள். சிவபூமி முதியோர் இல்லத்தில் ஆன்மீகச் சுடர் ரிசி தொண்டுநாத சுவாமி அவர்களின் உதவியால் நூல் நிலையம் மருந்தகம் யாவூம் அமைக்கப்பட்டுள்ளது. முதியோர் இல்லத்தில் ஆலயம் ஒரு சிறிய திரையரங்கு மற்றும் பல வசதிகளுடன் அவர்கள் இனிதே வாழ்ந்து வருகின்றனர்.

மேற்குறித்த முதியோர் இல்லத்திலுள்ள முதியவர்களுக்கு உணவு வழங்க விரும்புபவர்கள்
காலை விசேட உணவு செலவாக – 10,000/=
மதிய விசேட உணவு செலவாக – 20,000/=
இரவு விசேட உணவு செலவாக -10,000/=
விசேட உணவு வழங்க விரும்புபவர்கள் நேரடியாக கோண்டாவிலில் அமைந்துள்ள தலைமைக்காரியாலயத்தில் அல்லது சுழிபுரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்ல அலுவலகத்திலும் பணம் செலுத்திக்கொள்ளலாம்.
அல்லது
வங்கி பரிவர்த்தனையூடாக பணமரிமாற்றம் செய்து கொள்ளலாம்