பிறப்பிலேயே மனவளர்ச்சிக் குறைபாட்டுடன் பிறந்த எம் இனிய குழந்தைகளை
ஆற்றுப்படுத்தும் நோக்கில் வைத்தியகலாநிதி. ச. குகதாசன் தம்பதிகளின் உறவினரான
லீலாவதி சுப்ரமணியம் குடும்பத்தவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில்
2013ம் ஆண்டு ஆவணி சதுர்த்தி நன்னாளில் அடிக்கல் நாட்டப் பெற்றது. வெளிநாட்டிலும்
உள்நாட்டிலும் வசித்துவரும் நல்லுள்ளம் கொண்ட எமது உடன்பிறப்புகளின்
நிதிஉதவியுடனும் சேவை மனப்பான்மை கொண்ட அன்பர்களின் கூட்டு முயற்சியாலும்
02.07.2004 இல் 12 மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட
சிவபூமி பாடசாலை இன்று இக்குறுகிய காலப்பகுதியில் 302 மனவளர்ச்சிகுன்றிய
பிள்ளைகளை உள்வாங்கி அவர்களுக்கான கல்வியை ஊட்டி எமது சமுதாயத்தில்
ஏனைய சிறுவர்களைப்போல் சுதந்திரமுடனும் கௌரவத்துடனும் வாழவைக்கும் இந்த
இனிய இறைபணியை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றோம்.
மேற்குறித்த மாற்றுவலுவுடைய சிறார்களுக்கு உணவு வழங்க விரும்புபவர்கள்
காலை விசேட உணவு செலவாக – 5,000/=
மதிய விசேட உணவு செலவாக – 25,000/=
விசேட உணவு வழங்க விரும்புபவர்கள் நேரடியாக கோண்டாவிலில் அமைந்துள்ள தலைமைக்காரியாலயத்தில் பணம் செலுத்திக்கொள்ளலாம்.
அல்லது
வங்கி பரிவர்த்தனையூடாக பணமரிமாற்றம் செய்து கொள்ளலாம்
மேலதிக தகவல் தேவையாயின் எமது சிவபூமி மின்னஞ்சலான Sivapoomi@Gmail.com க்கு அல்லது தொலைபேசி இலக்கமான 021-222-7938க்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
Recent Comments