சிவபூமி மனவிருத்திப்பாடசாலை, கிளிநொச்சி
நாட்டில் இடம்பெற்ற அசாதரண சுழ்நிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் பெற்றௌர்கள் மற்றும் சமூக தலைவர்கள் பலர் எம்மை கேட்டவண்ணமிருந்தனர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இச்சிறுவர்களையூம் புறக்கணிக்காது அவர்களுக்கான பாடசாலை ஒன்றை அசாதரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி நகரில் நிறுவதற்கு சிவபூமி அறக்கட்டளை உடனடி நடவடிக்கையில் இறங்கி சுவாமி இராமதாஸ அறக்கட்டளையின் நிதி உதவியூடன் 26.05.2016 அன்று சிவபூமி மனவிருத்திப்பாடசாலையை திறக்கப்பெற்று தற்போது 47மாணவர்களை உள்வாங்கி அவர்களுக்கும் கல்வியூட்டி வருகின்றது. குறித்தி பிள்ளைகளுக்கு தினமும் உணவு வழங்கப்பட்டு வருகின்றது. நல்லுள்ளம் படைத்தவர்களின் பிறந்த நாள்,திருமண நாள்,நினைவு நாள்கள், முக்கிய நிகழ்வுகள் என்பன போன்றவற்றில் எமக்கு உணவை வழங்கி வருகின்றார்கள். இவர்களுக்கான ஒரு நாள் உணவு பற்றிய விபரங்கள் காலை உணவு – 5,000/= விசேட மதிய உணவு – 15,000/=